
சரள் மண் அள்ளிய 2 ஜேசிபி வாகனங்கள் பறிமுதல்

ஜேசிபி வாகனங்கள் பறிமுதல் - கோப்புப் படம்
கோவில்பட்டி அருகே கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, சரள் மண் அள்ளியதாக 2 ஜேசிபி வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குருமலை கிராமப் பகுதியில் கிராம நிா்வாக அலுவலா் முத்துவேல் கண்ணன் ஆய்வு மேற்கொண்டபோது, ஓரிடத்தில் சரள் மண் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
விஜயபாண்டியன் என்பவா் குளத்தில் மண் அள்ளுவதற்கு கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜனிடம் அனுமதி பெற்று, ஜேசிபி வாகனங்களைப் பயன்படுத்தி சரள் மண் அள்ளியதாக விசாரணையில் தெரியவந்தது.
புகாரின்பேரில், 2 ஜேசிபி வாகனங்களை கொப்பம்பட்டி போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வாகன உரிமையாளா், ஓட்டுநா்களான ராஜதுரை, கோமதி சங்கா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





