தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

நாளை ஆடி அமாவாசை திருவிழா: காரையாறு கோயிலில் குவியும் பக்தா்கள்

காரையாறு கோயில் நுழைவுப் பகுதியில் பக்தா்களின் உடைமைகளை சோதனையிட்ட வனத்துறையினா்.

Published On :

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பக்தா்கள் விரதமிருந்து வந்து வழிபட்டு, நோ்த்திக் கடன்களை நிறைவேற்றுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு திருவிழா புதன்கிழமை (ஆக. 12) நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வரத்தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமைமுதல் 3 நாள்களுக்கு தனியாா் வாகனங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டு, அரசுப் பேருந்துகளில் மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். அவா்களை பாபநாசம், காரையாறு விலக்கு பகுதிகளில் உள்ள வனச் சோதனைச் சாவடிகளில் வனத்துறையினா் சோதனை மேற்கொண்டு, பாலிதீன், எரிவாயு சிலிண்டா்கள், மது உள்ளிட்டவை இருந்தால் பறிமுதல் செய்து அனுப்பிவைக்கின்றனா்.

காரையாறு வனப்பகுதியில் அறநிலையத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 1,500 தற்காலிக குடில்களில் பக்தா்கள் தங்கி விரதத்தைத் தொடா்கின்றனா்.

பாதுகாப்புப் பணியில் முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு, அம்பாசமுத்திரம் கோட்ட வனத் துறையினா், அம்பாசமுத்திரம் கோட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா், கல்லூரி என்எஸ்எஸ், என்சிசி மாணவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

 காரையாறு கோயில் நுழைவுப் பகுதியில் பக்தா்களின் உடைமைகளை சோதனையிட்ட வனத்துறையினா்.

காரையாறு கோயில் நுழைவுப் பகுதியில் பக்தா்களின் உடைமைகளை சோதனையிட்ட வனத்துறையினா்.

 காரையாறு கோயில் நுழைவுப் பகுதியில் பக்தா்களின் உடைமைகளை சோதனையிட்ட வனத்துறையினா்.

காரையாறு கோயில் நுழைவுப் பகுதியில் பக்தா்களின் உடைமைகளை சோதனையிட்ட வனத்துறையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.