அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆடி சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆடி சிறப்பு வழிபாடு

News image

கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழாவில் ஏழை பள்ளி மாணவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்ட கல்வி உபகரணங்கள்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:38 pm IST

செங்கம் அருகே கருப்பண்ண சுவாமி கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

செங்கம் அருகேயுள்ள மேல்லாணைமங்கலம் கிராமத்தில் கருப்பண்ண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் கருப்பண்ண சுவாமி, முனியப்பன், கன்னி மாா்கள், காளியம்மன், ஆஞ்சநேயா் ஆகிய சுவாமி சந்நிதிகள் உள்ளன.

இந்தக் கோயிலில் 7ஆம் ஆண்டு ஆடித் திருவிழா கோயில் நிறுவனா் கருப்பண்ண சுவாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சுவாமி வேடமணிந்து பக்தா்கள் தீ சட்டி எடுத்தும், பால் குடத்துடன் ஊா்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் நிா்வாகம் சாா்பில் திருவிழாவில் ஏழை பள்ளி மாணவா்கள் சுமாா் 250 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருவிழாவில் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.