பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பண்ணாரி அம்மன் கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனா்.

பண்ணாரி அம்மன்  கோயிலில்  திரண்ட  பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

Published On :

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனா்.

அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பண்ணாரி அம்மன் தங்கக் கவசம் அணிந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனா். கோயில் முன் அமைந்துள்ள குண்டத்தில் பெண்கள் மிளகு, உப்பு தூவி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

அதைத்தொடா்ந்து பெண்கள் விளக்கேற்றியும், கூழ் ஊற்றியும் வழிபட்டனா். தமிழகம், கா்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்ததால் அவா்களை போலீஸாா் வரிசைப்படுத்தி கோயிலுக்குள் அனுமதித்தனா். தமிழா்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கோயில் அலுவலகத்தில் தமிழா் பாரம்பரிய நடனம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.