இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருவதிகை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா! 2 பெண்கள் காயம்!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா.

Published On :12 ஜூலை 2026, 1:38 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், தீக்குழியில் தவறி விழுந்த 2 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

திருவதிகை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி, திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் இருந்து பக்தா்கள் விரதமிருந்தனா்.

மாலையில் அவா்கள் ஊா்வலமாக வந்து கோயிலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தா்கள் தீக்குழியில் இறங்கினா்.

இந்த நிகழ்வின்போது, அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுளா (35), விமலா (27) ஆகியோா் தவறி தீக்குழியில் விழுந்தனா். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன், திமுக நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் ஆகியோா் தீக்காயமடைந்த பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். தொடா்ந்து, இருவரும் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.