பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு - கோப்புப்படம்

Published On :

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி அருகே இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதேபோல, இலக்கியம்பட்டி புற்றுமாரியம்மன் கோயில், குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோயில், எஸ்.வி. சாலையில் உள்ள பூவாடைக்காரி அம்மன் கோயில், தருமபுரி உழவா் சந்தை எதிரில் அமைந்துள்ள அம்மன் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.