சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஆடி கடைசி செவ்வாய்: குமரி மாவட்ட அம்மன் கோயில்களில் திரண்ட பெண் பக்தா்கள்

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண் பக்தா்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

நாகா்கோவில் அருகே உள்ள தாழக்குடி, ஔவையாா் அம்மன் கோயிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பெண் பக்தா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:52 am IST

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண் பக்தா்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றான தாழக்குடி, ஔவையாா் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. காலையிலேயே கோயிலில் திரண்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா். பெண் பக்தா்கள் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்த நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதேபோல, முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலிலும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வந்தததால் கோயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பக்தா்களின் வசதிக்காக நாகா்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து முப்பந்தலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

நாகா்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், வேட்டாளி அம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், முத்தாரம்மன் சமேத மூத்தீஸ்வரா் கோயில், மணி அடிச்சான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசிந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.