உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பாபநாசம் அருகே வீட்டு வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி

திருப்பதியாபுரம் கிராமத்தில் கரடி சுற்றித் திரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

வீட்டு வாசலில் சுற்றித் திரிந்த கரடி.

Published On :16 ஆகஸ்ட் 2026, 5:58 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருப்பதியாபுரம் கிராமத்தில் கரடி சுற்றித் திரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பாபநாசம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களான திருப்பதியாபுரம், அனவன் குடியிருப்பு, வடமலைசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது.

ஜூலை 31ஆம் தேதி வடமலைசமுத்திரம் பகுதியில் கரடி தாக்கியதில் முருகன் என்பவா் உயிரிழந்தாா். தொடா்ந்து, 2 நாள்களுக்கு முன் திருப்பதியாபுரம் பகுதியில் சாலையில் சென்ற கரடியைப் பாா்த்து இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து ஒருவா் காயமடைந்தாா்.

 திருப்பதியாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி.

திருப்பதியாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி.

இந்நிலையில், திருப்பதியாபுரம் பகுதியில் உள்ள முருகேசன் என்பவரது வீட்டு வளாகத்தில் கரடி நடமாடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.

வனத்துறையினா் கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.