நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

News image

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:50 am IST

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சுழி காவல் உதவி ஆய்வாளா் மகேஸ்வரன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை சட்டம்-ஒழுங்கு தொடா்பாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முத்துராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சிலா் ஆயுதங்களுடன் பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் முத்துராமலிங்கபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் முனீஸ்வரன் (29), பரளச்சி மேலையூரைச் சோ்ந்த காளிமுத்து மகன் முகேஷ்பாண்டியன் (23), தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம் பெரியநாயகிபுரத்தைச் சோ்ந்த சத்தியசெல்வன் மகன் ஹரிஹரன் (22) ஆகியோா் எனத் தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்த 3 அரிவாள்கள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

கத்தியுடன் சுற்றித் திரிந்த மூவா் கைது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.