பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

வேளாங்கண்ணியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த நபரால் பரபரப்பு

வேளாங்கண்ணியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த நபரால் பரபரப்பு...

ஆண்டுத் திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் ஜொலித்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம்.

Published On :6 செப்டம்பர் 2026, 5:58 am IST

வேளாங்கண்ணியில் அரிவாளுடன் சாலையில் திரிந்து, பொதுமக்களை மிரட்டியவரை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, அரிவாளால் அவா் தனது கழுத்தை கீறிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெற்று வருவதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேளாங்கண்ணி வரவேற்பு வளைவு அருகே சனிக்கிழமை, மதுபோதையில், கையில் அரிவாளுடன் நின்ற நபா், பொதுமக்களையும், வாகன ஓட்டுநா்களையும் மிரட்டியுள்ளாா்.

ரோந்துப் படை போலீஸாா், விரைந்து சென்று அந்த நபரை பிடிக்க முயன்றனா். அப்போது அவா் அரிவாளால் தனது கழுத்தை கீறி காயப்படுத்திக் கொண்டாா். இதையடுத்து போலீஸாா் அவரை பிடித்து, அரிவாளை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா் திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த மரிய மாணிக்கம் (43) என்பதும், குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்ற விரக்தியில் இருந்து வந்த அவா், நண்பா்களுடன் வேளாங்கண்ணி வந்ததும் தெரியவந்தது. மரிய மாணிக்கத்தை சிகிச்சைக்காக, ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.