FOLLOW US

ON GOOGLE DISCOVER

உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பயணிகள் கவனிக்க... வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை ஒட்டி இன்று (ஆக.27) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வேளாங்கண்ணி.

Published On :27 ஆகஸ்ட் 2026, 9:59 pm IST

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை ஒட்டி இன்று (ஆக.27) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று (ஆக. 27) முதல் செப். 10 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வேளாங்கண்ணி மாதா கோவியில் நாளை (ஆக. 29) மறுநாள் கொடியேறுவதை முன்னிட்டு நாளை சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்பு பேருந்துகளும், ஆக. 29 ஆம் தேதி ளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

அதே போன்று செப். 8 ஆம் தேதி கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும் வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மற்ற நாள்களில் பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கும் வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும், அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன.

Summary

Special buses will be operated starting today (August 27) in connection with the Velankanni Matha Church festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.