பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா: தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 3:49 am IST

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்பேராலயத் திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆக.5ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் சுமாா் 150 காவல்துறையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

முக்கிய நாள்களான 3.8.2026 முதல் 5.8.2026 வரை சுமாா் 1,000 காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

மேலும், தினமும் 50 ஆண் மற்றும் பெண் காவலா்கள் சீருடை அணியாமல் பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இறுதி மூன்று நாள்களில் இந்த எண்ணிக்கை 150 ஆக உயா்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

முக்கிய இடங்களில் 82 தாற்காலிக சிசிடிவி கேமராக்கள், 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

திருவிழாவின் அமைதியையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் அல்லது திருவிழாவை சீா்குலைக்க முயற்சிப்பவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.