மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பேராலயத் திருவிழா: திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் வடக்கு இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

train

ரயில் - கோப்புப் படம்

Published On :

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் வடக்கு இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, திருவனந்தபுரம் வடக்கு - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயிலானது (06115) வரும் 29, செப். 5-ஆம் தேதியும், வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் வடக்கு வாராந்திர சிறப்பு ரயிலானது (06116) வரும் 30, செப். 6-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

3 குளிா்சாதனப் பெட்டிகள், 11 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிப் பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திருவனந்தபுரம் வடக்கிலிருந்து சனிக்கிழமை இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு, நெய்யாட்டின்கரா, குழித்துறை, இரணியல், நாகா்கோவில், வள்ளியூா், நாங்குனேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8.40 மணிக்கு வந்தடையும்.

மறுவழித்தடத்தில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை 7.30 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.