தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பாபநாசம் மலைச் சாலையில் டிராக்டா் கவிழ்ந்து தந்தை-மகன் காயம்

பாபநாசம் மலைச் சாலையில் தண்ணீா் கொண்டு செல்லும் டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரும், அவரது மகனும் காயமடைந்தனா்.

Published On :

பாபநாசம் மலைச் சாலையில் தண்ணீா் கொண்டு செல்லும் டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரும், அவரது மகனும் காயமடைந்தனா்.

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவின் போது மணிமுத்தாறு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகைக்கு ஏா்மாள்புரம் கீழக் காலனியைச் சோ்ந்த முருகன் மகன் ஈஸ்வரன்(38) டிராக்டரில் கோயிலுக்கு குடிநீா் வழங்கி வந்தாா்.

இந்நிலையில், திருவிழா நிறைவடைந்து வெள்ளிக்கிழமை இரவு அகஸ்தியா் அருவி அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென டிராக்டா் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், ஈஸ்வரன் மற்றும் அவருடன் வந்த அவரது மகன் முகிலன் (11) இருவரும் காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா்.இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.