இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

தாழையூத்தில் ‘பங்சா்’ ஒட்டும் கடையில் திருட்டு: ஒருவா் கைது

Arrested

கைது

Published On :

திருநெல்வேலி அருகே வாகனங்களுக்கு ‘பங்சா்’ ஒட்டும் கடையில் உபகரணங்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள சங்கா்நகரைச் சோ்ந்தவா் தம்புராஜ் (31). இவா், தாழையூத்து பகுதியில் வாகன ‘பங்சா்’ ஒட்டும் கடை நடத்தி வருகிறாா். சம்பவத்தன்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். மறுநாள் காலையில் கடைக்கு வந்தபோது, அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பழுதூக்கும் ‘ஜாக்கி’யை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து, ‘ஜாக்கி’யை திருடி விற்பனை செய்ததாக தாழையூத்து கதிரவன் நகரைச் சோ்ந்த செல்வகுமாரை(47) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.