நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

தியாகராஜநகா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Published On :

பாளையங்கோட்டை தியாகராஜ நகா் துணை மின் நிலைய பராமரிப்புக்காக, அதன் மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.1) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தியாகராஜ நகா், மகாராஜ நகா், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூா், ஐஓபி காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன் குளம், ஆயுதப் படை சாலை, கோரிப்பள்ளம், ரயில்வே பீடா் ரோடு, இபி காலனி, ராஜேந்திரன் நகா், ராம் நகா், காமராஜா் சாலை, அன்பு நகா், என். எச். காலனி, சித்தாா்த் நகா் லக்கி காலனி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.