ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத இளைஞா் கைது

Arrested

கைது

Published On :

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் ஆமீன்புரம் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் ஷேக் மகன் ரம்ஜான்கனி(29). இவா் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா்.

அவருக்கு கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதம் மேலப்பாளையம் பகுதியில் சுமாா் 26 ஆடுகள் காணாமல் போன வழக்கிலும் அவா் தேடப்பட்டு வந்தாா். இந்நிலையில் அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.