நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, படப்பைக்குறிச்சி, காமராஜா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் அலெக்ஸ் பாண்டியன்(43). இவா் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பேட்டை காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு தொடா்பாக, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா். இதையடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பித்து திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பேட்டை போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



