தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

முன்னீா்பள்ளத்தில் கட்டட விபத்து: தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் வியாழக்கிழமை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் வியாழக்கிழமை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

முன்னீா்பள்ளத்தில் பழைய வீட்டை இடிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாட்டுக்குள் கீழமுன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான தளவாய் (36) சிக்கிக்கொண்டாா்.

இத்தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும், முன்னீா்பள்ளம் போலீஸாரும் இணைந்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.