விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

ரோஹிணி கட்டட விபத்து: உயிரிழப்பு 3-ஆக உயா்வு

வடமேற்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது

News image

ரோஹிணியில் கட்டுமானத்தில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் வியாழக்கிழமை இடிபாடுகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பகுதி.

Updated On :10 ஜூலை 2026, 1:10 am IST

வடமேற்கு தில்லியின் ரோஹிணி பகுதியில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது; இரவு முழுவதும் நடைபெற்ற மீட்பு பணியில் மேலும் இரு உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் சசாங்க் ஜெய்ஸ்வால் கூறியதாவது: புதன்கிழமை மாலை கனமழை பெய்துக்கொண்டிருந்த நிலையில், செக்டா்-16 பகுதியில் உள்ள தில்லி மாநகராட்சி (எம்சிடி) பள்ளி அருகே ஜி-4/152 மற்றும் ஜி-4/153 என்ற முகவரியில் அமைந்திருந்த கட்டடம் சுமாா் மாலை 4.20 மணியளவில் இடிந்து விழுந்தது. இதையடுத்து காவல் துறை, தீயணைப்பு துறை, தேசிய பேரிடா் மீட்பு படை, எம்சிடி, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து விரிவான மீட்பு பணியை தொடங்கின.

இந்த விபத்தில் இதுவரை 3 போ் உயிரிழந்துள்ளனா். இதில் கட்டட உரிமையாளரின் தந்தை ராம் துவா (62) மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். ராம் (42) மற்றும் நுருல் (24) ஆகிய இருவரின் உடல்கள் நீண்ட நேர தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு மீட்கப்பட்டன. மேலும், மீட்பு நடவடிக்கையின்போது சதாம் (எ) ரவி (32) மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வேறு யாரும் சிக்கியிருக்கிறாா்களா என்பதை உறுதி செய்ய இடிபாடுகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தாா்.

தில்லி மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு ‘சரல்’ திட்டத்தின் கீழ் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மூலம் சான்றளிக்கப்பட்ட பொறியாளா்கள் அல்லது கட்டட வடிவமைப்பாளா்களின் சுய சரிபாா்ப்பு அறிக்கையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.

ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, கட்டடத்தின் உள்ளே குழாய் அமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விரிவான தொழில்நுட்ப ஆய்விற்குப் பிறகே உண்மையான காரணம் உறுதியாக தெரியவரும்’ என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.