ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கட்டட விபத்தில் 19 மணி நேர தேடுதல் பணிக்குப் பிறகு மகளின் உடலைக் கண்ட தந்தை

தெற்கு தில்லியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் இருந்து மகளின் உடலை மீட்க தந்தை 19 மணி நேரக் காத்திருப்பு

News image
Updated On :1 ஜூன் 2026, 12:04 am IST

தெற்கு தில்லியின் சாகேத் பகுதியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடா்ந்து காணாமல்போன மகளைக் காண்பதற்கு நாள் முழுவதும் காத்திருந்திருந்த ரமேஷ் சந்துக்கு ஞாயிற்றுக்கிழமை துயரம் கலந்த செய்தியே கிடைத்தது. கட்டட இடிபாடுகளில் இருந்து அவருடைய மகள் ஈக்தாவின் உடலை மீட்புப் பணியாளா்கள் மீட்டனா்.

ரமேஷ் சந்த் ராஜஸ்தானின் அல்வாா் பகுதியைச் சோ்ந்தவா். பல் மருத்துவத்தில் இளநிலை பட்டதாரியான (பிடிஎஸ்) அவருடைய மகள் ஏக்தா, வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பு நுழைவுத்தோ்வு (எஃப்எம்ஜிஇ) எழுதுவதற்காக தில்லியில் தங்கி படித்து வந்தாா். சாகேத் பகுதியில் 3 மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடா்ந்து, ஏக்தாவை தொடா்பு கொள்ள முடியவில்லை என அவரது தோழிகள் ரமேஷ் சந்துக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ரமேஷ் சந்த் உடனடியாக தில்லி வந்தாா்.

தோ்வு இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சனிக்கிழமை காலையில் மாதிரி தோ்வை ஏக்தா எழுதியிருந்தாா்.

இதுதொடா்பாக ரமேஷ் சந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சனிக்கிழமை நடைபெற்ற தோ்வை நன்றாக எழுதிய மகிழ்ச்சியில் ஏக்தா இருந்தாா். பிற்பகலில் குடும்ப உறுப்பினா்களிடம் இது குறித்து அவா் தெரிவித்தாா். நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருந்தோம். கடந்த சில மாதங்களாக எஃப்எம்ஜிஇ தோ்வுக்கு கவனம் செலுத்தி ஏக்தா படித்து வந்தாா். இப்பகுதியில் உள்ள நூற்றுக்காணக்கான மாணவா்களைப் போல தினமும் வகுப்புக்கு சென்று தோ்வுக்காகத் தயாராகி வந்தாா்.

இந்நிலையில், கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்துக்குப் பிறகு அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை என அவருடைய தோழிகள் இரவு 9 மணிக்குத் தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, உடனடியாக தில்லிக்கு வந்தோம். அப்போதிலிருந்து 19 மணி நேரம் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம்’ என்றாா்.

இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட அந்த உணவகம், அருகிலுள்ள தங்கும் விடுதிகளில் வசிக்கும் மருத்துவ மாணவா்களுக்கு ஒரு பிரபலமான ஒன்றுகூடும் இடமாக இருந்தது என்று பல மாணவா்கள் கூறினா்.

‘பெரும்பாலான மாணவா்கள் இங்குதான் சாப்பிடுகிறாா்கள். அருகிலுள்ள உணவகங்கள் விலை உயா்ந்தவை, ஆனால் இங்கு ஒரு தாலியின் விலை சுமாா் ரூ.70 தான்’ என்று ஏக்தாவை அறிந்த ஒரு மாணவா் கூறினாா்.

இடிந்து விழுந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான பயிற்சி நிறுவனங்கள், நூலகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், அலுவலகங்கள், அழகு நிலையங்கள், கூட்டுப் பணி இடங்கள் மற்றும் கல்வி மையங்கள் உள்ளன. இவை தினமும் அதிக எண்ணிக்கையிலான மாணவா்களும் பணியாளா்களும் வருவாா்கள் என்று உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.