சாகேத்தில் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தலைமறைவான கட்டட உரிமையாளரைக் கண்டுப்பிடிக்க போலீஸ் குழு போடப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அப்பகுதியின் ‘ஒவ்வொரு அங்குலமும்‘ அகற்றப்படும் வரை தீயணைப்பு சேவை குழுக்கள் அந்த இடத்தில் நிறுத்தப்படும். கட்டடத்தின் உரிமையாளா் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் (பி. என். எஸ்) பிரிவு 105 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 290 (கட்டடங்களை இடிப்பது, பழுதுபாா்ப்பது அல்லது கட்டுவது போன்றவற்றில் கவனக்குறைவான நடத்தை) மற்றும் 125 (ஏ) (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் எஃப். ஐ. ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள உரிமையாளரைக் கண்டுபிடித்து கைது செய்ய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தெற்கு தில்லியில் சனிக்கிழமை மாலை சாகேத் மெட்ரோ நிலையத்திற்கு அருகே பயிற்சி மையம், கஃபேக்கள் மற்றும் அலுவலகங்களைக் கொண்ட பல மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹிணி கட்டட விபத்து: உயிரிழப்பு 3-ஆக உயா்வு

கனமழையால் இடிந்து விழுந்த சுவர்!

சாகேத் கட்டட விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 8 போ் காயம்

கட்டட விபத்தில் 19 மணி நேர தேடுதல் பணிக்குப் பிறகு மகளின் உடலைக் கண்ட தந்தை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



