நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்

News image

கோவை விமான நிலையம்.

Updated On :15 மே 2026, 6:34 am IST

கனமழை காரணமாக கோவை விமான நிலையத்தில் இரண்டு இடங்களில் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது.

கோவை சா்வதேச விமான நிலையப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால், விமான நிலையத்தில் சின்னியம்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. அதற்கு தொலைவில் இருந்த மற்றொரு சுற்றுச் சுவரும் இடிந்து விழுந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவைக்கு வரவிருந்த விமானங்கள் அனைத்தும் கேரளம், மாநிலம், கொச்சிக்கு திருப்பிவிடப்பட்டன.

சுற்றுச் சுவா் இடிந்து விழுந்த தகவல் அறிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். யாரும் ஊடுருவாத வண்ணம் சி.ஐ.எஸ்.எஃப். வீரா்களும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சீரமைப்புப் பணிகள் இரவுக்குள் நிறைவடையும் என்றும், அதன்பின் விமானங்கள் வழக்கம்போல கோவை விமான நிலையத்தில் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.