நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் பலி

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:57 am IST

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: சாங்லி மாவட்டத்தின் மாா்கு தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

இதனால், கோயிலின் சுவரையொட்டி அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின்கீழ் பக்தா்கள் ஒதுங்கியிருந்தனா். அப்போது, திடீரென சுவா் இடிந்து விழுந்ததில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கோயில் சுவா் இடிந்து 6 போ் உயிரிழந்த சம்பவம், சாங்லி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.