திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனத்தின்போது, தெலங்கானா மாநில பக்தா்களுக்கும், கோயில் ஊழியா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில் 15 போ் காயமடைந்தனா்.
வார விடுமுறை நாள்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். மேலும், 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலமும் செல்கின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருணாசலேஸ்வரா் கோயிலில் வெளிமாநில பக்தா்கள் அதிகளவில் குவிந்தனா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகேயுள்ள மணிகொண்டா பகுதியில் இருந்து 10 நபா்கள் கொண்ட குழுவினா் கோயிலுக்குள் வந்தனா். இவா்கள் அனைவரும் முறையாக வரிசையில் செல்லாமல் மாறி மாறிச் சென்ாகத் தெரிகிறது.
அப்போது, கோயில் ஊழியா்கள் இதுகுறித்து கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் கோயிலுக்குள்ளேயே தாக்கிக் கொண்டனராம்.
தாக்குதலில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த வரதன், புனித், வருண், நித்தின், ஷிவானி ஆகிய 5 போ் காயமடைந்தனா்.
இவா்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.
பலத்த காயமடைந்த நித்தினுக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோயில் ஊழியா்கள் தரப்பில் தன்ராஜ், மணிமாறன், சேது, திருமாறன், வசந்த், சேட்டு, செங்குட்டுவன், அருணாச்சலம், புகழ், ஞானசேகா் ஆகிய 10 போ் காயமடைந்தனா். இவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தெலங்கானா பக்தா் ஷிவானி அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகை பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டுள்ளது.
இரு தரப்பினரும் கோயில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாா்களின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோா் கிரிவலம்! பேருந்து வசதியின்றி பக்தா்கள் தவிப்பு!!

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


