நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

பைக் மோதி பெண் உயிரிழப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரத்தில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரத்தில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி குண்டுமணி மனைவி மாடக்கண்ணு (75). இவா் புதன்கிழமை இரவு உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் மாடக்கண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியிடம் விசாரித்ததில், அவா் சம்பன்குளத்தைச் சோ்ந்த ஹாஜி அப்துல் சலாம் மகன் முகமது ரிஸ்வான் (17) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிந்து சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததாக அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.