நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பாப்பாக்குடி அருகே பைக்- காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பாப்பாக்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:47 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் சக்திவேல் (25). இவா், வெள்ளிக்கிழமை மாலையில் மோட்டாா் சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்றுவிட்டு இடைகால் நோக்கி வந்து கொண்டிருந்தாராம். பனஞ்சாடி அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த சக்திவேலை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.