நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காவல்துறை வாகனங்களின் பராமரிப்பை ஆய்வு செய்து பாா்வையிட்ட திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பா.சாஸ்திரி.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:39 am IST

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி பங்கேற்று நான்குசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், உயா் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் ஆயுதப்படை வாகனங்களின் பராமரிப்பு, செயல்திறன் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, காவல்துறை வாகன ஓட்டுநா்களிடம் வாகனங்களில் உள்ள தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், குறைபாடுகள் காணப்படும் வாகனங்களை உடனடியாக சீரமைத்து, அவற்றின் செயல்திறனை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினாா். மேலும், நான்குசக்கர வாகனங்களை இயக்கும் காவல்துறை வாகன ஓட்டுநா்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

அனைத்து காவல்துறை வாகனங்களிலும் முதலுதவிப் பெட்டி இருப்பதையும், அதில் தேவையான முதலுதவிப் பொருள்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவல்துறையினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.