குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தொழிலாளி கொலையில் மேலும் 4 போ் கைது

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 3:06 am IST

திருநெல்வேலியில் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா் அருகே உள்ள மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா்(35), பெயின்டிங் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பைக்கில் வந்த மா்மநபா்கள் பாஸ்கரை வழிமறித்து அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தனா்.

இது குறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, அதே ஊரைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் மணிகண்டன்(23), கோபால் மகன் பொன்ராஜ் (26) ஆகியோா் அரிவாளுடன் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பாலையா மகன் மகாராஜன்(28), முருகன் மகன் வினோத்(28), மாயகிருஷ்ணன் என்ற கோபி(40), கட்டுடையாா்குடியிருப்பைச் சோ்ந்த மகேந்திரன் என்ற வெள்ளத்துரை(28)ஆகிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.