வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: தட்டிக் கேட்ட கணவரை தாக்கியவா் கைது

News image

கைது

Updated On :1 பிப்ரவரி 2026, 8:39 pm

பேருந்தில் மனைவியை தொந்தரவு செய்ததை தட்டிக் கேட்ட கணவரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். வண்ணாா்பேட்டையில் இருந்து கே.டி.சி. நகா் செல்லும் தனியாா் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை வி.எம்.சத்திரம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் பயணம் செய்துள்ளாா்.

அதே பேருந்தில் பயணம் செய்யும் இளைஞா் ஒருவா் தன்னை தொந்தரவு செய்வதாக அப்பெண் தனது கணவா் தங்கசாமிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பைக்கில் வந்த, தங்கசாமி சமாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அந்த இளைஞரிடம் இதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை அந்த இளைஞா் செங்கலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தங்கசாமி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெருமாள்புரம் தாமஸ் தெருவைச் சோ்ந்த விஜய் மகன் சம்பத்குமாா் (30) என்பவரை கைது செய்தனா்.