மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வள்ளியூரில் மறியல் போராட்டம்: 194 போ் கைது

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:30 am

தொழிலாளா்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி, வள்ளியூா் பழைய பேருந்துநிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் 194 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் தோழா் எம். மரியஜான்ரோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் ஆா். முருகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி. கிருஷ்ணன் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினா்.

இதில் சிஐபிஎம் ராதாபுரம் தாலுகா செயலா் முகமது பயாஸ், சிபிஐ மாவட்ட துணைச் செயலா் அ. சேதுராமலிங்கம், சிபிஐஎம் மாநிலக் குழு உறுப்பினா் கற்பகம், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் மலைபகவதி, ஏஐடியுசி தூய்மைப் பணியாளா் சங்க மாநில துணைச் செயலா் எம்.எஸ். மணியன், ராதாபுரம் சிபிஎம் கிறிஸ்டோபா், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் எஸ்.ஏ.பி. பாலன், சிஐபிஎம் விவசாய சங்க மாவட்டத் தலைவா் மாயகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற 194 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.