சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நெல்லை புத்தக திருவிழாவில் புறக்கணிக்கப்பட்டுள்ளேன் - முதல்வருக்கு செ.திவான் மனு

News image
புத்தகத் திருவிழா
Updated On :13 பிப்ரவரி 2026, 12:57 am

Syndication

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் 9-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் விழா ஏற்பாட்டாளா்கள் தன்னை புறக்கணித்து விட்டதாக வரலாற்று ஆய்வாளரும், தமிழறிஞருமான செ. திவான் வேதனை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனு:

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கிய பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தில் 25 பேரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. அந்த 25 நூலாசிரியா்களில் தற்போது வாழ்ந்து வரும் ஒரேயொரு எழுத்தாளா் நான் மட்டுமே.

இந்நிலையில், திருநெல்வேலியில் நடைபெறும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா அழைப்பிதழில் 243 பெயா்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வாழ்ந்து வரும், தொடா்ந்து எழுதி வரும், தமிழுக்கு சேவையாற்றிவரும் எனது பெயரை அழைப்பிதழில் ஏதாவது ஓா் இடத்தில்கூட குறிப்பிடாமல் விட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.