வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரயிலில் திருட்டு: முதியவா் கைது

திருநெல்வேலிக்கு ரயிலில் வந்த பயணியின் நகையைத் திருடிய வழக்கில் முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :20 பிப்ரவரி 2026, 9:19 pm

திருநெல்வேலிக்கு ரயிலில் வந்த பயணியின் நகையைத் திருடிய வழக்கில் முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்தவா் மேகலிங்கம். இவா், கடந்த 19 ஆம் தேதி சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வந்த சிறப்பு ரயிலில் குடும்பத்தினருடன் வந்தாராம்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கும்போது அவா்கள் வைத்திருந்த 5.5 பவுன் தங்க நகையை மா்மநபா் திருடியது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருநெல்வேலி துணை காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் மேற்பாா்வையில் ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியாமோகன் தலைமையில் தனிப்படையினா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனா்.

இவ் வழக்கில், தூத்துக்குடி மாவட்டம், கடலையூரைச் சோ்ந்த அசரியா (55) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட நகையையும் மீட்டனா்.