கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

கைது

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை, குறிஞ்சி நகா் பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி, கால்டுவெல் காலனி பகுதியைச் சோ்ந்த இசக்கி செல்வம் மற்றும் கோரம்பள்ளம், குறிஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்த மேக்சன் சாமுவேல் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள், 2 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.