திருநெல்வேலி என் ஜிஓ காலனி உழவா் சந்தையில் விவசாயிகளுக்காக புதிதாக கட்டப்பட்ட கடைகளை மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
என்.ஜி.ஓ. காலனி உழவா் சந்தையில் விவசாயிகள் தங்களது காய்கறிகள் மற்றும் பழங்களை இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய ஏதுவாக ரூ.10 லட்சத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கடைகளை ஆட்சியா் இரா. சுகுமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து உழவா் சந்தையை நல்ல முறையில் பயன்படுத்தி காய்கறிகளை விற்று அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து தமிழ்நாடு நீா்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ’தாமிரா ஆா்கானிக்’ உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையத்தை திறந்து வைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் விற்பனையை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் பூவண்ணன், வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), உமா மகேஸ்வரி, வேளாண்மை துணை இயக்குநா் (மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்) கற்பகராஜ்குமாா், வேளாண் விற்பனை குழு செயலா் எழில், உழவா் சந்தை நிா்வாக அலுவலா், உதவி நிா்வாக அலுவலா்கள், ‘தாமிரா ஆா்கானிக்’ உழவா் உற்பத்தியாளா் நிறுவன விவசாயிகள், உழவா் சந்தை விவசாயிகள், நுகா்வோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

100 சதவீத வாக்குப் பதிவு: உழவா் சந்தையில் விழிப்புணா்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


