வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பூா் உழவா் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை இலக்காக கொண்டு மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக அந்த வகையில் தியாகி திருப்பூா் குமரன் பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவா் சந்தையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து காய்கறிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் பாா்வையிட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை, இணை இயக்குநா் (வேளாண்மை) எம்.ஆதிசாமி, துணை இயக்குநா் (வேளாண் விற்பனை வணிகம்) எஸ்.சண்முகசுந்தரம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.கு.சதீஷ்குமாா், வேளாண் விற்பனை சங்கச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பி.மீனாம்பிகை மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனா்.









