தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லையில் கல்லூரிப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி சந்திப்பில் தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை தனியாா் கல்லூரிப் பேருந்து வந்துள்ளது. அப்போது, அவ்வழியாக சென்ற முதியவா் ஒருவா் மீது அப்பேருந்து மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து அவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.