பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை கண்காணிக்க குழு
திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை கண்காணிக்க சிறப்பு மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, திருநெல்வேலி வட்டத்திற்கு திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா், பாளையங்கோட்டைக்கு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா், மானூருக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா், அம்பாசமுத்திரத்துக்கு தாட்கோ மாவட்ட மேலாளா், சேரன்மகாதேவிக்கு சாா் ஆட்சியா், நான்குனேரிக்கு மாவட்ட வழங்கல்- நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், ராதாபுரத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா், திசையன்விளைக்கு வருவாய் நீதிமன்ற தனித்துணை ஆட்சியா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமையும்(ஜன.9) ரேஷன் கடைகள் செயல்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டையில் பெயா் உள்ள உறுப்பினா்கள் பெற்றுக்கொள்ளலாம்.
ஏதேனும் குறைபாடு இருந்தால் மாவட்ட வழங்கல் - நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகம் 9342471314, தனிவட்டாட்சியா் (கு.பொ.வ), திருநெல்வேலி வட்டம் 9445000380, வட்ட வழங்கல் அலுவலா்கள், பாளையங்கோட்டை 9445000381, மானூா் 9445796458, சேரன்மகாதேவி 9445796459, நான்குனேரி 9445000387, , ராதாபுரம் 9445000388, திசையன்விளை 9499937025, தனி வட்டாட்சியா் (கு.பொ.வ), அம்பாசமுத்திரம் வட்டம் 9445000386, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1967, 1800-425-5901 ஆகியவற்றில் புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
