சேலத்தில் விடுபட்ட 30 ஆயிரம் பேருக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
சேலத்தில் விடுபட்ட 30 ஆயிரம் பேருக்கு 19 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 3,000 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரிசி பெறும் குடும்ப அட்டை தாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10,88,238 குடும்பங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தகுதி பெற்றிருந்தனா். இவா்களுக்கு 1,765 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டன.
இதில், சேலம் மாவட்டத்தில் 10.58 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பெறாத 30 ஆயிரம் பேருக்கு 19 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
