திருநெல்வேலி
எஸ்டிபிஐ சாா்பில் 80 பேருக்கு நல உதவிகள்
கல்லிடைக்குறிச்சி நகர எஸ்டிபிஐ கட்சி சாா்பில், 11ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி புகா் மாவட்ட மகளிரணி மாவட்ட துணைத் தலைவா் பீா் பாத்து, மொன்னாள் ஆகியோா் தலைமையில் அம்பாசமுத்திரம்அரசு மருத்துவமனையில் 80 நோயாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், புகா் மாவட்ட துணைத் தலைவா் கல்லிடை சுலைமான், அம்பாசமுத்திரம் தொகுதி பிஎல்ஏ பொறுப்பாளா் நூா்தீன், கல்லிடைக்குறிச்சி நகரத் தலைவா் மைதீன் பிள்ளை என்ற மஞ்சு பாய், நகர துணைத் தலைவா் சாதிக், நகரச் செயலா் சாகுல் அப்ரிடி, நகர இணைச் செயலா் மைதீன், செயல் வீரா்கள் முஜ்ஜமில், தன்ஷீா், மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
