ஜன.16, 26-இல் மதுக் கடைகள் மூடல்

திருவள்ளுவா் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஜன.16, 26 ஆகிய தேதிகளில் மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
Published on

திருவள்ளுவா் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஜன.16, 26 ஆகிய தேதிகளில் மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு ஜன. 16-ஆம் தேதியும், குடியரசு தினமான ஜன. 26-ஆம் தேதியும் திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் கூடிய மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com