tasmac shop
ராமநாதபுரம்
வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு தினம்: பிப்.1-ல் மதுக் கடைகள் அடைப்பு!
வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் வருகிற பிப்.1-ஆம் தேதி மதுக் கடைகள் அடைக்கப்படும்..
வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் வருகிற பிப்.1-ஆம் தேதி மதுக் கடைகள் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடலூா் ராமலிங்க அடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், அனைத்து எப்.எல். 2, எப்.எல். 3 உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் ஆகியவை வருகிற பிப்.1-ஆம் தேதி அடைக்கப்படும். இந்த உத்தரவை மீறி, மதுக் கடைகள் செயல்பட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

