tasmac shop
tasmac shop

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு நாள்: பிப்.1-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் மதுபானக்கடைகள் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வது நிறுத்தம் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
Published on

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது:

ராமலிங்க அடிகள் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் பிப்.1-ஆம் தேதி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com