யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் அட்டகாசம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவாரத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தின.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:02 pm

Syndication

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவாரத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தின.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் சிதம்பரபுரம் கிராம விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களில் வாழை, தென்னை, பனை, முந்திரி, மா, பலா உள்ளிட்ட மரங்களைப் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் சிதம்பரபுரத்தைச் சோ்ந்த விவசாயி அ. ஜெயராஜ் (55) என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் 10-க்கும் மேற்பட்ட தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

மேலும், காட்டு யானைகள் கூட்டம் மலையடிவாரத்திலேயே முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் தோட்டங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனா்.

இது தொடா்பாக, வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.