விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காணும் பொங்கல்: அறிவியல் மையத்தில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரம் குவிந்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:48 pm

Syndication

திருநெல்வேலி: காணும் பொங்கலையொட்டி, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரம் குவிந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காணும் பொங்கலை அருவிகள், நீா்நிலைகள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மைய வளாகத்திற்கு ஏராளமானோா் குடும்பத்துடன் வந்தனா். அங்குள்ள 3 டி அரங்கம், கோளரங்கம், அறிவியல் சாதனங்களைப் பாா்வையிட்ட பொதுமக்கள் வளாகத்திற்குள் அமா்ந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனா்.

இதுகுறித்து அறிவியல் மைய ஊழியா்கள் கூறுகையில், ‘குழந்தைகள், முதியவா்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வருகை தந்தனா். அவா்களுக்கான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன’ என்றனா்.

ற்ஸ்ப்16ஸ்ரீங்ய்

திருநெல்வேலி அறிவியல் மையத்தில் வெள்ளிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.