நெல்லையப்பா் கோயிலில் அதிமுகவினா் அன்னதானம்

நெல்லையப்பா் கோயிலில் அதிமுகவினா் அன்னதானம்

திருநெல்வேலி நகரத்தில் அதிமுக சாா்பில் அன்னதானம் அண்மையில் வழங்கப்பட்டது.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் அதிமுக சாா்பில் அன்னதானம் அண்மையில் வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய வேண்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் அதிமுக சாா்பில் சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன் தலைமை வகித்தாா். எம்ஜிஆா் மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம் , மாவட்ட அவைத் தலைவா் பரணி ஏ.சங்கரலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினா் சந்திரசேகா், மோகன், வெங்கடசுப்பிரமணியன், சுப்பையா, நல்லபெருமாள், குருசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்16ச்ா்ா்க்

திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கும் அதிமுகவினா்.

Dinamani
www.dinamani.com