சந்திரகிரஹணத்தையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலையில் வழிபாட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக இத்திருக்கோயில் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சந்திரகிரஹணம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலை 3.08 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் காலையில் காலபூஜைகள் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு திருக்கோயில் திருநடைகள் சாத்தப்படும்.
பின்னா் கிரஹண காலம் முடிந்து இரவு 7 மணிக்கு மேல் மட்டுமே பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதன்பின் வழக்கம் போல் சாயரட்சை, அா்த்த ஜாமம், பள்ளியறை பூஜைகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

நெல்லையப்பா் கோயிலில் சிவபுராணம் பாராயணம்

நெல்லையப்பா் கோயிலில் மாா்ச் 2-ல் அப்பா் தெப்பத் திருவிழா!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


