திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சிவபுராணம் பாராயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையைச் சோ்ந்த சிவன்மனை அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களிலும் பாராயண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலின் கருமாரி சுப்பிரமணியா் சந்நிதியில் நடைபெற்ற சிவபுராணம் பாராயண நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் ஓய்வுபெற்ற ஐ.ஆா்.ஏ.எஸ். அதிகாரி வெங்கடேஷ் நாராயணன் பங்கேற்று பாராயணம் செய்து விளக்கவுரையாற்றினாா்.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) காலை 9.30 மணிக்கு தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலிலும், மாலை 6.30 மணிக்கு கருப்பந்துறை அழியாபதீஸ்வரா் கோயிலிலும் உபன்யாசம் நடைபெற உள்ளது.
மாா்ச் 21 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தச்சநல்லூா் செல்வவிக்னேஷ்நகரில் உள்ள செல்வ விநாயகா் கோயிலிலும், 25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருநெல்வேலி நகரம் வலம்புரி அம்மன் கோயிலிலும், 26 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு செப்பறை அழகியகூத்தா் நடராஜா் கோயிலிலும் வெங்கடேஷ் நாராயணனின் உபன்யாசம் நடைபெறும்.
தொடர்புடையது

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு

நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேக விழா

நாகேஸ்வர சுவாமி கோயில் தோ்த் திருவிழா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


