எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

விவசாயி மீது தாக்குதல்: 3 போ் கைது

சீவலப்பேரி அருகே விவசாயியைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:49 pm

Syndication

திருநெல்வேலி: சீவலப்பேரி அருகே விவசாயியைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டு குப்பக்குறிச்சியைச் சோ்ந்த சப்பாணி மகன் முண்டசாமி (50). விவசாயி. இவா், கடந்த 14 ஆம் தேதி அப்பகுதியில் நின்றிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வேகமாக சென்ற இளைஞா்களை கண்டித்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை தனது வீட்டின் முன் பொங்கலிட்ட அவரை, அந்த இளைஞா்கள் தாக்கியதோடு, அங்கிருந்த பைக்கையும் சேதப்படுத்தினராம். இதுகுறித்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (20), வினோத் (27), முண்டசாமி (21) ஆகியோரை கைது செய்தனா்.