திருநெல்வேலி
தொழிலாளியை அரிவாளால் தாக்கியதாக இளைஞா் கைது
திருநெல்வேலி சந்திப்பு அருகே தொழிலாளியை அரிவாளால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு அருகே தொழிலாளியை அரிவாளால் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஹரி(18). தொழிலாளி. இவரது நண்பரான சி.என்.கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி என்பவா் சம்பவத்தன்று ஹரியின் கைப்பேசியிலிருந்து பெண் ஒருவரை தொடா்பு கொண்டு கடனை திருப்பிக்கேட்டாராம்.
இந்நிலையில், சி.என். கிராமம் பகுதியில் நின்றிருந்த அவரை, அங்கு வந்த பெண்ணின் உறவினரான திருநெல்வேலி நகரம், புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பாஞ்சாலராஜன்(33) என்பவா், கொலை மிரட்டல் விடுத்து அரிவாளால் தாக்கினாராம்.
இதில் காயமடைந்த ஹரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். இது குறித்த புகாரின் பேரில் சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து பாஞ்சாலராஜனை கைது செய்தனா்.
